திண்டுக்கல் தொடங்கி மதுரை வரை…

இரு தினங்களுக்கு முன் திண்டுக்கலில் இருந்து மதுரை வரை ஒரு பேருந்து பயணம் மிக திகிலாக அமைந்தது.

வேகம், வேகம், வேகம் மட்டுமே. பேருந்து (தனியார்) சரியாக மாலை 6.50 மணிக்கு கிளம்பியது 8.20 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. திண்டுக்கலில் தொடங்கிய பேருந்தின் ஓட்டுனருக்கு Sound Horn மற்றும் பேருந்தை வேகமாக ஓட்டுவது மட்டும் தான் தெரியும் போல. சமயநல்லூர் வரையிலும் அவ்வளவு வேகம், ஒலிப்பானிலிருந்து கையை எடுக்கவேயில்லை. தன்னை நம்பி இத்தனை பயணிகள் உள்ளனர், சாலையில் வேறு வாகனங்களும் (முக்கியமாக இரு சக்கர வாகனங்களும்) செல்ல வேண்டுமே என்ற எண்ணம் துளியும் இல்லை.

நல்லவேளை, பயணம் நன்றாகவே முடிந்தது. ஓட்டுனர்கள் தயவுசெய்து சிந்திக்க வேண்டும், நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் சில பொறுப்புகளும், கடமையும் உள்ளது என்று.

Advertisements

இந்திய தேசிய கல்வி தினம்

இந்திய தேசிய கல்வி தினம்

 அனைவருக்கும் ஆசிரியர் தினம் தெரியும்.

(இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ ?)

 இந்திய நாட்டின் மிக தேவையான இன்னும்மொரு நாள் குறித்து தெரியுமா ? இந்தியாவின் தேசிய கல்வி தினம்.

 இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவர்அபுல் கலாம் ஆசாத், அவர்களின் பிறந்ததினம், இந்தியாவின் தேசிய கல்வி தினம்.(11 நவம்பர்).

 இனியாவது கொண்டாடுவோமே…